பழனியில் மரம் விழுந்து வாலிபர் பலியான சம்பவம்: நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பழனியில் நேற்று மரம் விழுந்து இறந்துபோன ஹரிஹரசுதன் அவர்களின், உறவினர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். மேலும் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் .     மரம் விழுந்து இறந்த குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும் மற்றும் பலமுறை மனு கொடுத்தும் மரத்தை அகற்றாத காரணத்தினால் நகராட்சி ஆணையரை கண்டித்து சாலை மறியல் நடைபெறுகிறது.