திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை 


திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஆண்கள் கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல் பணியானது நபார்டு திட்டத்தின் கீழ் மதிப்பீடு ரூபாய் 147.65 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்களால் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.இந் நிகழ்வில் முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன்,ஜான் பகுதி கழக செயலாளர் கருணாகரன், வேலம்பாளையம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் வி கே பி மணி, பரணி பெட்ரோல் பங்க் நடராஜ், முன்னாள் கவுன்சிலர் திலகர் நகர் சுப்பு மற்றும் பள்ளி தலைமையாசிரியை ஆசிரியப் பெருமக்கள் ஆகியோர் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.