பழனியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இணையும் விழா

பழனியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இணையும் விழா நடைபெற்றது.

 


 

பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பல்வேறு கட்சியில் இருந்து விலகி  தொண்டர்கள் இணையும் விழா நடைபெற்றது. ஆயக்குடி பகுதிகளில் பல்வேறு கட்சிகளில் இணைந்து செயலாற்றிக் கொண்டு வந்துள்ள கட்சித் தொண்டர்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அதிருப்தி அடைந்ததால் அனைவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைவதாக முடிவெடுத்துள்ளனர்.

 

இந்நிலையில் ஆயக்குடி பேரூர் செயலாளர் சிவக்குமார் மற்றும் சர்குணம், சக்திகுமார், ஏற்பாட்டின் பேரில் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி மற்றும் ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இவர்களை மாவட்ட செயலாளர் நல்லசாமி வரவேற்று கட்சியின் சாதனைகளைப் பற்றியும் கட்சியின் செயல்பாடுகள் பற்றியும் பல்வேறு கருத்துக்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.

 


 

மேலும் ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார் புதிதாக இணைந்த கட்சி தொண்டர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.புதிய பொறுப்பாளர்களுக்கு அமமுக கட்சியின் உறுப்பினர் படிவத்தில் பெயர்களை இணைத்து பதிவு செய்தனர். புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் கட்சியின் மூத்த பொறுப்பாளர்கள் கட்சி கொடி தாங்கிய பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்வில் சிறுபான்மை மாவட்ட செயலாளர் ஜமாலுதீன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் துரைசாமி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் பொருந்தல் ரவீந்திரன், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் சசிதரன் அம்மா பேரவை இணைச் செயலாளர் கார்த்திகேயன் ஒன்றிய பிரதிநிதி மகுடீஸ்வரன் ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டி கோவில்பட்டி ஊராட்சி செயலாளர் ரவீந்திரன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.