அமித்ஷா வருகைக்காக, சென்னை விமான நிலையத்தில் பழங்கள், மலர்களால் அலங்காரம்

 


மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா வருவதால் சென்னை விமான நிலையம் பழ, காய், மலர் அலங்கார வளைவு


மத்திய உள்துறை மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அமீத்ஷா டெல்லியில் இருந்து நாளை (21ந் தேதி) தனி விமானத்தில் புறப்பட்டு பகல் 1.40 மணிக்கு  சென்னை வந்து சேருகிறார். மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வரும் அமீத்ஷாவிற்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வரவேற்பு முடிந்த பின் மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கேட் எண் 6 வழியாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் லீலா பேலஸ் சென்று ஓய்வு எடுக்கிறாா்.


மாலை 4 மணிக்கு ஹோட்டல் லீலா பேலசில் இருந்து புறப்பட்டு கலைவானா் அரங்கம் செல்கிறாா். அங்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.  விழாவில்  முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்கின்றனர். 


விழா முடிந்து மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஹோட்டல் லீலா பேலசுக்கு வந்து  சேருகிறாா். அங்கு பாஜக நிா்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகா்களை சந்தித்து பேசுகிறாா். மறுநாள் 22ந் தேதி (ஞாயிறு) காலை ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை மீனம்பாக்கம்  பழைய விமான நிலையம் வந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறாா். 


மத்திய மந்திரி அமீத்ஷா வருகையை முன்னிட்டு பழைய மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மலர்களால் கொண்ட அலங்கார வளைவு அமைக்கப்படுகிறது. மேலும் பழைய விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் வாழை, கரும்புகள் கொண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் தொண்டர்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் மீனம்பாக்கம் பகுதியில் சாலையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.  பழைய விமான நிலைய பகுதியே விழா கோலம் பூண்டு உள்ளது.