தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது -ரஜினிகாந்த்ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாகவும் டிசம்பர் 31 ல் அதற்கான தேதி அறிவிப்பதாகவும்  ரஜினிகாந்த் அறிவித்தார். அதனை  தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதற்கிடையே சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். 
அவர் பேசுகையில் :-

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கடந்த 2017 ம் ஆனது தெரிவித்திருந்தார். அதை நியாபகப்படுத்தி மக்களிடம் ஒரு எழுற்சி வரவேண்டும் என்று காத்திருந்தேன் அந்த நாள் வந்துவிட்டது  கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும்.  இவ்வாறு தெரிவித்தார்