தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சி அரசு ஊழியர்கள் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டுமென தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு பேரணி நடத்தினர்


தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சி அரசு ஊழியர்கள் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டுமென தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு பேரணி நடத்தினர்



தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


அந்த வகையில் சென்னை தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சியில் அரசு ஊழியர்கள் 100% வாக்களிக்க வேண்டுமென தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.


இந்தப் பேரணியில் தேர்தல் நாளில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும், பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும், மனசாட்சிக்கு பயந்து வாக்களிக்கவேண்டும், நல்லது செய்யும் நபரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களிக்க வேண்டும். போன்ற வாசகங்களை பதாகைகளாக ஏந்தியவாறு சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட முக்கிய  சாலைகள் மார்க்கமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இதில் சிட்லபாக்கம் பேரூராட்சி கழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும், பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்கவேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Previous Post Next Post