சேலம் அம்மாபேட்டையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மிகவும் சக்திவாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் மாசி மாத திருவிழா

சேலம் அம்மாபேட்டையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மிகவும் சக்திவாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் மாசி மாத திருவிழா முன்னிட்டு இன்று உற்சவர் காளியம்மனை சிம்ம வாகனத்தில் சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து மேலும் உற்சவருக்கு இருபுறம் சிங்க வாகனமும் ஏராளமான கற்கள் பதித்த நகை ஆபரணங்களால் சிறப்பாக அலங்காரம் செய்து மேடையில் கொழுவிருக்க  செய்தனர் மூலவர் ஸ்ரீ காளி அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது அர்ச்சகர் குணா சிறப்பாக அலங்காரம் செய்தார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட பம்பை குழுவினர் பம்பை முழங்க காளியம்மன் வேடமிட்டு பக்தர் ஜவகர் பச்சைக் காளி அம்மன் வேடமிட்டார்.


 இதனை தொடர்ந்து 108  மாவிளக்கு ஊர்வலம் சக்தி அழைப்பு சிறப்பாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வருடம் தவறாமல்  காளியம்மன் வேடமிட்டு பக்தர் ஜவகர் விழாவில் சிறப்பாக காளியம்மனை  வழிபடுகிறார். இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் அறங்காவலர் மோகன்குமார், ஸ்ரீதர் மற்றும் திருக்கோவில் அர்ச்சகர் ரங்கநாதன், வரதராஜ், வெங்கட்ராமன், ராஜசேகர் மற்றும் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்.