வரும் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

 
வரும் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.


இதில் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு எஸ் ஆர் ராஜாவும், பல்லாவரம் தொகுதிக்கு இ.கருணாநிதியும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு தா.மோ.அன்பரசன், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு அரவிந்த் ரமேஷ் ஆகியோரை அறிவித்துள்ளார்.


நான்கு பேரும் ஏற்கனவே அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர்.மீண்டும் அவர்களுக்கே அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்புயளித்துள்ளனர்.


இதைத்தொடர்ந்து தாம்பரம்,பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


மேலும் தாம்பரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் திமுக கொடியை ஏந்தி முக்கிய சாலைகளான சண்முகம் சாலையில் காந்தி ரோடு ஆகிய சாலைகளில் பேரணியாக நடந்து வெற்றி சின்னம் உதயசூரியன் என கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர்.