சேலம் தாதகாப்பட்டி அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாஸ்தா ஐயப்பன் தேவஸ்தானத்தில் சர்வேஸ்வரருக்கு மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை சிறப்பாக நடைபெற்றது

 சேலம் தாதகாப்பட்டி அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாஸ்தா ஐயப்பன் தேவஸ்தானத்தில் சர்வேஸ்வரருக்கு மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை சிறப்பாக நடைபெற்றது. நான்காம் காலமாக அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் அர்ச்சகர் கோபி சுரேஷ் , பாலா, சதாசிவம்  சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கும்ப ஆரத்தி  பஞ்ச கற்பூர ஆரத்தி மற்றும் மகா கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.


 ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேணுகோபால் சண்முகவல்லி குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்