திருப்பூரில் மாநில மகிளா காங்கிரஸ் சார்பில்,  350 பேருக்கு காலை உணவு, முககவசம் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் : காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் வழங்கினார்

 மாநில மகிளா காங்கிரஸ் சார்பில், 350 பேருக்கு காலை உணவு, முககவசம் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் வழங்கினார்  திருப்பூர், அணைபாளையத்தில் மாநில மகிளா காங்கிரஸ் சார்பில், பொதுமக்களுக்கு  காலை உணவு, முக கவசம் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு 
மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கி அணைப்பாளையம் பகுதியை சேர்ந்த 350 பேருக்கு காலை உணவு முக கவசங்கள், மற்றும் ஹோமியோபதி மருந்துகளை வழங்கினார்.   மகிளா காங்கிரஸ் மாநில செயலாளரும், மாநிலத் பிரியதர்ஷினி காங்கிரஸ் பிரிவின் தலைவருமான  தீபிகா அப்புக்குட்டி முன்னிலை வகித்தார். இதில்   மாநில குழு உறுப்பினர் வி ஆர் ஈஸ்வரன்,  திருப்பூர் மாநகர துணை தலைவர்,  கதிரேசன் மாநகர பொது செயலாளர், , என் ராமகிருஷ்ணன்,    மாநகர மகளிர் காங்கிரஸ் தலைவர். சகாயமேரி உள்பட திரளானவர்கள் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.