வெள்ளியம்பாளையம் மகாலட்சுமி நகரில் 500 பேருக்கு கஷாயம்: மகா கணபதி திருக்கோயில் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம், செம்பியநல்லூர் ஊராட்சி, வெள்ளியம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி நகரில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரானோ வைரஸ் நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள நிலவேம்பு, கபசுர குடிநீர், மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை கலந்த கசாயம், அவிநாசி அரசுப் பொதுமருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு மற்றும் அருள்மிகு மகா கணபதி திருக்கோயில் டிரஸ்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

     முதல் நாளாக  நிலவேம்பு, கபசுர குடிநீர், மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை கலந்த கசாயம் வழங்கப்பட்டது. முன்னதாக கசாயம் வழங்கும் நிகழ்விற்கு அவிநாசி அரசு பொது மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு மருத்துவர்மாலதி,சித்த மருத்துவப்பிரிவு மருந்தாளுநர் சரவணன் ஆகியோர் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர்.

       அதன்படி, மகாலட்சுமி நகர் அருள்மிகு மகாகணபதி திருக்கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வீடு தோரும் சென்று போதிய தனிமனித இடைவெளி, மாஸ்குடன் கசாயம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளக  மகாலட்சுமி நகரில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தொடர்ந்து தனிமனித இடைவெளி, மாஸ்குடன் நிலவேம்பு, கபசுர குடிநீர், மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை கலந்த கசாயம் வழங்கப்பட்டது.
        
    இந்நிகழ்ச்சிக்கு  மகாலட்சுமி நகர் அருள்மிகு மகாகணபதி திருக்கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் காளிமுத்து, இராமமூர்த்தி, விஷ்னு, இளையராஜா, ராஜன், கணேசன், சக்திவேல், கருப்பசாமி, ஸ்ரீனிவாசன்,சதீஸ், முருகன், முருகராஜ், விவேக், அருள் குமார், ஜீவா ஆகியோர்கள் தேவையான உதவிகளை செய்திருந்தனர். கொரானோ வைரஸ் நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தனிமனித இடைவெளி, மாஸ்க் கட்டாயம் அனிதல், அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றை கடைபிடிக்க அறிவுருத்துவதுடன் ஊர்பொதுமக்களுக்கு தொடர்ந்து கசாயம் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.