சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது - ரூ.3 400/- பறிமுதல்.


தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கொழுவைநல்லூர் பகுதியில் திருக்குமார் என்பவரது வீட்டில் கொலுவைநல்லூர் நாடார் தெருவைச் சேர்ந்த 

சுவாமிநாதன் மகன் முத்துக்குமரன் (54), பாலையா மகன் பெருமாள் (65), கந்தன் மகன் மோகன்ராஜ் (47), இசக்கிமுத்து மகன் திருக்குமார் (64), பரமசிவன் மகன் பொன்காந்தி (58) மற்றும் தெற்கு ஆத்தூரைச் சேர்ந்த செய்யது புகாரி மகன் பிலால் (48), பரூக் மகன் ஆயுப்கான் (48) ஆகிய 7 பேர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளும், ரூபாய் 3,400/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.