தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்


தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் (AICCI) நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து, முன்னாள் பொதுச் செயலாளர் மயில்வேல், சங்க துணைத் தலைவர் பாலன், இணைச் செயலாளர் சுரேஷ் குமார், சங்க முன்னாள் துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

முகாமில் சங்க உறுப்பினர்கள், தங்களது குடும்பத்தினர்கள் மற்றும் பணியாளர்கள் சேர்த்து 150 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.