கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் திமுகவில் இணைந்தார்.!

அதிமுகவைச் சேர்ந்த கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்  திமுகவில் இணைந்தார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் கஸ்தூரி சுப்புராஜ். அதிமுகவை சேர்ந்தவரான இவர் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் இன்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

உடன் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தன் உட்பட பலர் இருந்தனர்.