தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மாசார்பட்டி பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் - மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார்.!


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு  மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாசார்பட்டி ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 80 பேருக்கு இன்று அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் உத்தரவின்பேரில், மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது, மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் உட்பட காவல்துறையினர் மற்றும் மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாத்துரை, மேலக்கரந்தை ஊராட்சி மன்ற தலைவர் முத்து முனியம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.