தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் - கனிமொழி எம்பி வெளியிட்டு பார்வையிட்டார்.!


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாகனங்கள் மூலமாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியத்தையும், கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் 

வீடியோ மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் , உதவி ஆட்சியர் ஸ்ருத்தஞ் ஜெய்  நாராயணன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!