தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 7 பேர் கைது - 122 மதுபாட்டில்கள் பறிமுதல்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மது விற்பனை செய்த ஆறுமுகநேரி எஸ்.எஸ் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (27) என்பவரை கைது செய்து 66 மது பாட்டில்களை பறிமுதல் செய்தது, 

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மது விற்பனை செய்த பூசனுரைச் சேர்ந்த கணபதி மகன் உதயகுமார் (44) என்பவரை கைது செய்து 37  மதுபாட்டில்களை பறிமுதல் செய்தது உட்பட தூத்துக்குடி வடபாகம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய போலீசார் 

நேற்று ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 122 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post