விளாத்திகுளத்தில் 50 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தியவர் கைது.!*


தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும்  வாகன சோதனை  நடைபெற்று வருகிறது.

அதன்படி  விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் நேற்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்வமரத்துபட்டி  பகுதியில் ரோந்து சென்றபோது 

அங்கு  சந்தேகத்திற்கிடமாக வந்த TN39 H  5099 என்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 50  கிலோ எடையுள்ள 60 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக போலீசார் அந்த வாகன ஓட்டுனரான ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காமராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ் மகன் ராம செல்வம் (34)  என்பவரை கைது செய்து,  மேற்படி வாகனத்தையும், ரேசன் அரிசி  மூட்டைகளையும் பறிமுதல் செய்து   தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்

Previous Post Next Post