தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - இதுவரை 813 பேரிடம் விசாரணை - வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல்.!


தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். 

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த விசாரணை அதிகாரி பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார்.

28வது கட்ட விசாரணையில் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதில் 95 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

இதுவரை 1153 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 813 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் ஒரு வாரம் விசாரணை நடைபெறும்.

29வது கட்ட விசாரணையில் போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்டெர்லைட்  குடியிருப்பில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்க உள்ளோம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆனையத்தின் இடைக்கால அறிக்கையினை  முழுமையாக ஏற்று  உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு விசாரணை ஆணையம் தரப்பில் நன்றி தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூடு போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கல்வித் அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தனர் இதனடிப்படையில் தமிழக அரசு அவர்களுக்கு வேலை வழங்கி வழங்கியுள்ளதாக ஒரு நபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்

Previous Post Next Post