தூத்துக்குடியில் காமராஜரின் 119வது பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!


தூத்துக்குடி காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் ரமேஷ், கஸ்தூரி தங்கம், மோகன்தாஸ், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக

தூத்துக்குடி வ.உ.சி மார்கெட் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்தனர். 

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,  பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெயகணேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ், வக்கீல்கள் கோமதி மணிகண்டன், சுகந்தன் ஆதித்தன், சரவண பெருமாள், நிர்வாகிகள் நவ்சாத், சகாயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

காங்கிரஸ்

தூத்துக்குடி வஉசி மார்க்கெட் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காய்கனி மார்க்கெட் அருகில் உள்ள சிலைக்கு மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழக மீட்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் தலைவி தனலட்சுமி, முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, மாநகர துணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், பிரபாகர், மாநகர மாவட்ட பொதுச்செயலார்  ராஜா, மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயராஜ், சேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post