மேகதாது அணையை கட்டுவதை அனுமதிக்கக்கூடாது - மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை.!


தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மேகதாது அணை கட்டுவது,வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு கொடுத்து தெரியப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகா அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடடப்பட்ட யார்கோல் அணையை இடித்து அகற்ற வேண்டும், 2020-ம் ஆண்டு விடுபட்ட வெள்ள நிவாரணத் தொகை, மற்றும் 

2020, 2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நல்லையா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட உதவி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விளாத்திகுளம் தாலுகா தலைவர் பிச்சையா, ஓட்டப்பிடாரம் தாலுகாக செயலாளர் அசோக்குமார், தலைவர் கிருஷ்ணமுர்த்தி, ஸ்ரீவைகுண்டம் செயலாளர் சுப்புத்துரை, திருச்செந்தூர் தாலுகா தலைவர் நடேச ஆதித்தன், செயலாளர் கோவிந்தன் மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

Previous Post Next Post