பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியவர் குண்டர் சட்டத்தில் கைது.!


பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி மிரட்டல் விடுத்த ‘சைபர் கிரைம் குற்றவாளி” குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை பிரபல ரவுடிகள், போதைப் பொருள் கடத்தியவர்கள் உட்பட 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை. எடுத்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் உடையார்குளத்தைச் சேரந்தவர் முத்து மகன் பலவேசம் (43). இவர் கடந்த 28.05.2021 அன்று ஒரு பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன்  மேற்பார்வையில் 

தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பலவேசத்தை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி பலவேசம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  சிவசங்கரன்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அறிக்கையின் அடிப்படையில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். செந்தில்ராஜ் நாசரேத் உடையார்குளத்தைச் சேரந்த முத்து மகன் பலவேசம் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

அவரது உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவசங்கரன் அவர்கள் எதிரி பலவேசத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 74 பேர், போக்சோ வழக்குளில் சம்மந்தப்பட்டவர்கள் 13 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர், 

மணல் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர், விபச்சார வழக்கில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளி ஒருவர் என மொத்தம் 100 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post