தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம்  பண்டாரவளையில் தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சண்முகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட கழகம் முன்பு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அதிமுகவினர் பதாகைகள்ஏந்தியும் கண்டன கோசங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கழக அமைப்பு செயலாளரும்,முன்னால் அமைச்சருமான சி.த செல்ல பாண்டியன்  தலைமையில் சிதம்பர நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தின் முன்பு தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மாசிலாமணி புரம் பகுதியில் கழக  அமைப்பு செயலாளரும், முன்னால் ஆவின் சேர்மன் சின்னதுரை தலைமையில்  அவரது இல்லத்தில் முன்பு தொண்டர்களுடன் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 61 வார்டுகளிலும் அந்தந்த பொறுப்பாளர்கள் சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக  ஊரடங்கு அமலில் இருப்பதால் பாதுகாப்பு  இடைவெளியை கடைபிடித்தும்,  முககவசம் அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Previous Post Next Post