தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 2 பேருக்கு குண்டாஸ் - மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை.!


தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் உட்பட  2 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  நடவடிக்கை எடுத்துள்ளார்

விளாத்திகுளம் வி. தளவாய்புரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (22) என்பவர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 

பாலியல் வன்புணர்ச்சி செய்ததில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அந்த சிறுமியின் ஜாதியை காரணம் காட்டி அவதூறாகவும் பேசியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் 

விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  வழக்கு பதிவு செய்து கடந்த 23.07.2021 அன்று மேற்படி எதிரி காளிராஜை கைது செய்தார். இவ்வழக்கின் எதிரியான காளிராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் காவல்; துணை காவல் கண்காணிப்பாளர்  பிரகாஷ் அவர்களும்,

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்குளம் கிராமத்திற்கு அருகே  உள்ள ஒரு தனியார் சோலார் நிறுவனத்தில் கடந்த 12.07.2021 அன்று, ஸ்ரீவைகுண்டம் வெளர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (எ) தோல்மூட்டை மகன் சுப்பையா (எ) சுரேஷ் (31), 

அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் இசக்கி (29), வெள்ளூர் வண்டிமலைச்சியம்மன் கொவில் தெருவை சேர்ந்த தளவாய் மகன் சுபாஷ் (22) மற்றும் தெற்கு காரசேரி பகுதியை சேர்ந்த  ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து (29) ஆகியோர் உட்பட 10 பேர் 

மேற்படி நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து அங்குள்ளவர்களிடம் தகராறு செய்து நிறுவன வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களையும், நிறுவனத்தின் 69 சோலார் பேனர்களையும் கற்களால் சேதப்படுத்தி உள்ளனர். 

இதனை தட்டிகேட்ட அந்நிறுவனத்தின் வாட்ச்மேனாக பணிபுரியும் உடையார்குளம் பகுதியை சேர்ந்த இனாமுத்து மகன் சங்கரசுப்பு என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பையா (எ) சுரேஷ், இசக்கி, சுபாஷ் மற்றும் இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரியான சுப்பையா (எ) 

சுரேஷ் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில் ராஜ் 1)விளாத்திகுளம் வி. தளவாய்புரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் மற்றும் 2) ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (எ) தோல்மூட்டை மகன் சுப்பையா (எ) சுரேஷ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

அவரது உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் மற்றும் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. விஜயலெட்சுமி ஆகியோர் மேற்படி எதிரிகள் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Previous Post Next Post