பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அட்டை: பத்திரிகையாளர் அசதுல்லா தொடர்ந்த வழக்கில் நான்கு வாரங்களில் 'Accreditation committe' அமைக்கப்படும் என அரசு உறுதி.!


பத்திரிகையாளர்களுக்கு accreditation card committe அமைக்காமல் அரசு அங்கீகார அட்டை ( accreditation card) வழங்கப்படுவதை எதிர்த்து  பத்திரிகையாளர் அசதுல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, D.I.P.R இயக்குனர் சார்பில் நிலை அறிக்கை( status report) தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட'The Tamilnadu Media Representative accreditation rules 2002'ன் படியே இது வரை பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அரசு அங்கீகார அட்டை தவறான நபர்களுக்கு வழங்கப்படுவதை தடுக்கும் வகையில், அங்கீகார அட்டை பெறும் பத்திரிகையாளர் அதற்கு தகுதியானவர் தானா என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகளில் மாற்றும் செய்யப்பட்டு தற்போது 'Tamilnadu State News Media Representative Accreditation Rules 2021' கொண்டு வரப்படுகிறது.

இந்த புதிய விதிகளுக்கு இன்னும் 6 வார காலங்களில் ஒப்புதல் பெறப்படும் எனவும் அதன் பின்னர் 4 நான்கு வாரங்களில் பல்வேறு பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனங்களிடம் விண்ணப்பங்கள் பெற்று 'Accreditation committe' அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, அரசின் இந்த நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்து,  பத்திரிக்கையாளர் அசதுல்லா தொடர்ந்த வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

Previous Post Next Post