தூத்துக்குடி காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளர் 42 பேருக்கு பணி நியமன ஆணை - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் வழங்கினார்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் அவர்கள் உதவி ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து கூறினார்.

 2019 ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் மாரிமுத்து, பரமசிவன் ஆகிய 2 பேரும், ஊரக உட்கோட்டத்தில் வெங்கடாசலபெருமாள், தரண்யா மற்றும் மேகலா ஆகிய 3 பேரும், மணியாச்சி உட்கோட்டத்தில் சுப்புராஜ், சுந்தர், சந்தனமாரி, சுகந்தி மற்றும் பிரம்மநாயகம் ஆகிய 5 பேரும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் ரத்னவேல்பாண்டியன், முகில் அரசன், சுப்பிரமணியன், ராகவி மற்றும் ஜெபா ஆகிய 5 பேரும், 

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சண்முகராஜ், ரவிக்குமார், கோவிந்தராஜ், சண்முகம், முத்துகுமார், பாமா, அனுசியா மற்றும்; செல்வராஜ் ஆகிய 8 பேரும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் விக்னேஷ், பரமசிவன், மஞ்சு, செல்வக்குமார், அஜித், மாரியப்பன், மாரியம்மாள், ஜூடித் கிருபா, ஜெயஜோதி, வெங்கடேஷ், குரு கிருத்தகா, மாடசாமி மற்றும் ராமசந்திரன் ஆகிய 13 பேரும், 

திருச்செந்தூர் உட்கோட்டத்தில் சுதாகர், முத்தமிழரசன், முகம்மது ரபீக் மற்றும் ஆரோக்கிய ஜென்சி ஆகிய 4 பேரும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில்  வசந்தி மற்றும் ஐசக் பாக்கியநாதன் ஆகிய 2 பேரும் என மொத்தம் 42 பேர் தேர்வாகியுள்ளனர். மேற்படி 42 பேருக்கும் இன்று (25.08.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார், நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான நியமன ஆணை வழங்கி சிறப்பாக பணியாற்றவேண்டும் என்று வாழ்த்தினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் காவல்துறையில் பணியாற்றுவது பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு உன்னதமான பணியாகும், நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும், அதே போன்று பொதுமக்களுக்கு உதவுவதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் அனைவரிடமும் ஒற்றுமையை கடைபிடித்து நேர்மையாகவும், சேவை மனப்பான்மையுடன் சிறப்பாக பணியாற்ற வேண்டும். பணியிலும், சொந்த வாழ்க்கையிலும் குறிப்பிட்ட நேரத்தை காலம் தவறாமல் கடைபிடிக்க வேண்டும், பயிற்சியை நல்லமுறையில் பயின்று சிறந்த உதவி ஆய்வாளர்களாக திகழவேண்டும், பணியுடன் உங்கள் குடும்பத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும், உங்கள் உடல் நலத்தையும் ஆரோக்கியத்துடன் பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேற்படி தேர்வு செய்யப்பட்ட 42 உதவி ஆய்வாளர்கள் வரும் 01.09.2021 அன்று சென்னையில் உள்ள காவல்துறை பயிற்சி கல்லூரியில் பயிற்சிக்கு செல்ல உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர்  சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர்  மாரியப்பன் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்  பேச்சிமுத்து மற்றும்  உதவியாளர்  ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Previous Post Next Post