தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.!


தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன இதுதொடர்பாக நகர் கோட்ட செயற்பொறியாளர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது 

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பெறும் உயரழுத்த மின் மின் தொடரில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் புதிய பேருந்து நிலையம்,கேடிசி நகர்,ஜெயராஜ் ரோடு, டூவிபுரம் 1,2, 3வது தெரு,பழைய பேருந்து நிலையம்,மீனாட்சிபுரம் ரோடு,பால விநாயகர் கோவில் தெரு,பங்களா தெரு மற்றும் ஜெய்லானி தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்