இலங்கை அகதிகளின் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் - நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள கனிமொழி கருணாநிதி எம்.பி.!


இலங்கை அகதிகளின் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் - நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள கனிமொழி கருணாநிதி எம்.பி.!

இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு

இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் புதிதாகக் கட்டித் தரப்படும்

இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

இலங்கை தமிழர்களுக்கு இவ்வாண்டில் 108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாமில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும்

இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கான முழுச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்

இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.