ஆகாய தாமரை மூலமாக கைவினைப் பொருட்கள் தயாரித்து முடித்தவர்களுக்கு சான்றிதழை வழங்கினார் - கனிமொழி கருணாநிதி எம்.பி.!


தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் ஊராட்சி மன்ற மண்டபத்தில் கடந்த 15 நாட்களாக ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  கலந்து கொண்டு 30 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:

ஆகாய தாமரை பொதுவாக ஆறு மற்றும் நீர் நிலைகளை  அழிக்கக்கூடியவை. அதனை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றிய சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்கள், குடும்ப தலைவிகள், வேலையில் இருக்கும் பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். 

கடந்த கொரோனா காலத்தில் நிறைய நபர்களுக்கு வேலையிழப்பு நேர்ந்தது. வேலை இல்லாத நபர்கள் என்ன செய்வதென்று அறியாமல் இருந்தனர். தற்பொழுது நம் தண்ணீர் மற்றும் நீர்நிலைகளை நாசமாக்கி கொண்டிருந்த ஆகாய தாமரையின் மூலம் பயன்பெறும் வகையில் 

மக்களுக்கு பயனுள்ள கைவினைப்பொருளாக மாற்றி தண்ணீரை நல்ல நிலைக்கு விவசாயிகள் பயனுக்கு மற்றும் பொதுமக்களின் குடிநீரின் பயனுக்கு இதன்மூலம் பயன்பெறுகிறது. 

அனைத்து  மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள அனைத்து பெண்களும் இந்த முயற்சியை இதோடு மட்டுமல்லாமல் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். மலேசியாவில் ஆகாய தாமரையில் பர்னிச்சர்கள் செய்து அதனை அடுத்த நாட்டிற்கு விற்பனை செய்கின்றார்கள். 

அதுபோல் நாமும் இந்த கைவினைப்பொருட்களை பொதுமக்களை ஈர்க்கும் வகையிலான நல்ல பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொண்டு வாழ்க்கையின் பொருளாதாரத்தை முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, நபார்டு மாவட்ட திட்ட மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மதுரை சிறுதொழில் மேம்பாட்டு கழக மேலாளர் பழனிவேல்முருகன், 

திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, முக்கிய பிரமுகர்கள் பிரம்மசக்தி, ஜனகர், ராமஜெயம், ஊராட்சி மன்ற தலைவர் சதீஸ்குமார் மற்றும் அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post