திறக்கப்பட்ட பள்ளி! உற்சாகத்தில் சேலம் பாவடி நகரை பள்ளி மாணவர்கள்!


சேலம் பாவடி நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இன்று திறக்கப்பட்டது. பள்ளியில் மொத்தம் 295 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். நீண்ட நாட்களுக்கு கொரோனோ பெருந் தொற்று குறைந்ததன் காரணமாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. 

இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்து முகக்கவசம் வழங்கி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ததன் பிறகு  வகுப்பறைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 

இன்றைய வருகை பதிவின் படி 150 மாணவர்கள்  அதாவது 50% சதவீத மானவர்கள் மட்டுமே வருகை புரிந்துள்ளனர்.தலைமை ஆசிரியர் எஸ்.ரவி, மற்றும் ஆசிரியர்கள் சசிகலா, கிருத்திகா,செந்தில் ராஜ், ராபர்ட் பால்  ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.