மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.!*2 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கக்கூடிய கே.ஆர்.என் ராஜேஷ்குமாருக்கும், தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சோமுவுக்கும் தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறகிறது. இந்நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஏற்கெனவே ஒரு இடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவின் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதிமுகவின் வைத்தியலிங்கம், கே.பி. முனுசாமி ராஜினாமா செய்த நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் மற்ற இரண்டு இடங்களிலும் திமுக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.