சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கான "நீ உன்னை அறிந்தால்" என்ற தலைப்பில் பெண்கள் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு.!


திராஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லூரியின் அதிதி மகளிர் மேம்பாட்டு பிரிவு மற்றும் மாவட்ட ரோட்டரி பெண்கள் மேம்பாட்டு திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ் இணைந்து பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இன்று  மாணவிகளுக்கு நீ உன்னை அறிந்தால் என்ற தலைப்பில் பெண்கள் மேம்பாட்டுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. 

டாக்டர்.தில்லைக்கரசி மற்றும் டாக்டர். ராஜேஸ்வரி, பாரதி வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் துரைசாமி, தலைமையாசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியர்கள்  எஸ்.வித்யா, குமணன் மற்றும் திருவேங்கடம், ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ் தலைவர்  நிர்மலா மற்றும் கர்லின் மேரி,திரஜ்லால் காந்தி கல்லூரியின் முதல்வர் டாக்டர் செல்வராஜ் மற்றும் பி & டி டைரக்டர் டாக்டர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post