தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் உற்சாகமாக தொடங்கிய முதலாம் ஆண்டு வகுப்பு.!


தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரியில்  64 வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 64வது பிரஷர் டே  இன்று சிறப்பாக நடைபெற்றது.  

இவ்விழாவில் ஏ. என்.சந்திரமௌலி சிஇஓ, ஏஎன்சிஎம் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்ட்ஷ் & பார்மர் பிரசிடெண்ட், பெங்களூர் சேம்பர் ஆஃப் இன்டஸ்ட்ரி காமர்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வி. கார்த்திகேயன் அவரது உரையில் கல்லூரியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி புதுமையான கற்றல் முறைகள் கல்லூரி பெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விருதுகள் மாணவர்களின் சாதனைகள் கல்லூரியின் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

முதலாமாண்டு மாணவ மாணவியர் இக்கல்லூரியில் வழங்கப்படும் எண்ணற்ற வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்தினார். சிறப்பு விருந்தினராக ஏ. என்.சந்திரமௌலி  இக்கல்லூரியின் மிகச் சிறந்த கட்டமைப்பு மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகள் குறித்து பாராட்டினார். 

மேலும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சி குறித்தும் மாணவர்கள் இன்றைய தொழில் நிறுவனங்களில் தேவைக்கு ஏற்றவாறு என்எஸ்டிசி - ன் செக்ட்டார் ஸ்கில் கவுன்ஸில்ஸ் வகுத்துள்ள பன்முகத் திறன்கள் குறிப்பிட்ட பணிக்கான திறன்கள் மற்றும் தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். 

கல்லூரியின் தலைவர் சி.வள்ளியப்பா  தனது தலைமையுரையில் கடந்த 64 வருடங்களாக ஒழுக்கத்துடன் கூடிய சிறப்பான கல்வியை இக்கல்லூரி வழங்கி வருகிறது என்று கூறினார். மேலும் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உலக அளவில் சிறந்த தொழில் முனைவோர்களாகவும் முன்னணி தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளை சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் மேன்மேலும் வளர்ந்து கல்லூரிக்கும் பெற்றோருக்கும் நற்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்று வாழ்த்தினார்‌.

கல்லூரியின் துணை தலைவர் சொக்கு வள்ளியப்பா அவர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கல்லூரியின் துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா அவர்கள் மாணவர்கள் இண்டஸ்ட்ரி ரிலேட்டட் பிராஜக்ட்ஸ் செய்யவேண்டுமென்றும் ஸ்டார்ட் அப் ஆக்டிவிட்டீஸ் மூலமாக இளம் தொழில் முனைவோர்கள் ஆக முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார். இவ்விழாவில் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்களின் சிறப்பான அனுபவங்களை முதலாமாண்டு மாணவருடன் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் நல்ல அறிவுரைகள் கூறி மாணவர்கள் வாழ்வில் முன்னேற்ற வேண்டும் என்று வாழ்த்தினார்.

Previous Post Next Post