அம்மன் கோயிலில் வெள்ளிக் கலசம் திருட்டு!


சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் இருந்த அம்மன் கோயில் கதவு உடைக்கப்பட்டு வெள்ளிக்கலசம் திருடப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள புழல் பகுதியில் லஷ்மி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கோயிலின் பூசாரி நேற்று கோயிலுக்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியாகியுள்ளார். உள்ளே இருந்த கலசம் திருடப்பட்டு இருப்பதை பார்த்து போலிஸாருக்கு தகவல் சொல்லியுள்ளார்.

வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.