சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்.!


கடந்த 8ஆம் தேதி சசிகலா மற்றும் இளவரசிக்கு சொந்தமான பையனூர் பங்களா மற்றும் தோட்டம் ஆகியவை முடக்கப்பட்டது. இந்நிலையில் சிறுதாவூரில் உள்ள வி.என். சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

ஏற்கெனவே சசிகலா, இளவரசி மற்றும் சுதாரனுக்கு சொந்தமான சொத்துகள் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.