தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம் கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ்,  தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கண்காணிப்பு அலுவலர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது:

இன்றைய தினம்  தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி உள்ளார்கள் அதனடிப்படையில் இன்று இக்கூட்டம் நடைபெறுகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையானது இந்த மாதத்தில் இருந்து ஆரம்பித்து அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 3 மாதம் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இருக்கும். அதுதொடர்பான என்ன என்ன தற்காப்பு நடவடிக்கை உத்திகளை கடைபிடிக்க வேண்டும் என 

அனைத்து துறை அலுவலர்களுடன் குறிப்பாக வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பேரூராட்சி, மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன் ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்களுடன் குளத்தினை தூர்வாறும் பணிகள், நீர் வழித்தடங்களை பராமரிப்பது, கடல் முக துவாரங்களில் மணல் தேங்காமல் பார்த்துக்கொள்வது, மருத்துவ துறையை பொறுத்தவரை மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்வது உள்ளிட்டவை ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியை பொறுத்தவரை 36 இடங்கள் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகமான மழைப்பொழிவு இருந்தால் வெள்ளம் நின்று போகக்கூடிய இடங்களாக உள்ளது. வெள்ளம் சூழ்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைப்பதற்கு 97 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 

6000 தன்னார்வலர்கள் உதவுபவதற்கு தயாராக உள்ளனர். மாநகராட்சி பகுதிகள்தான் மழை வந்தால் அதிகமாக பாதிக்கப்படுகிறது. ஏன் என்றால கடல் மட்ட பகுதியில் இருந்து இயல்பாகவே புவியில் கீழ்மட்டமாக அமைந்துள்ளது. 

மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் கூடுதலான சம்ப் மூலம் மழை நீரை வெளியேற்ற அறிவுறுத்தியுள்ளோம். 100 முதல் 150 எச்பி மோட்டாரின் மூலம் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் நகராட்சிகள்,   பஞ்சாயத்துகள், கடற்கரையோரங்கள் மற்றும் 

வெள்ளம் வரக்கூடிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று  என்னென்ன பணிகள் எல்லாம் செய்ய வேண்டும் என்றும் அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அமுதா மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post