சேலத்தில் கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. அதிகமாக பயன்படுத்தப்படுகிற சிமெண்ட் ரூ.60 முதல் 80 வரை உயர்த்தப்பட்டுள்ளது கம்பி விலையும் அதிகப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது, ஒரு வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கிறது. 

இந்த நிலைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து கட்டுமான பொருட்களுக்கான விலயும் கட்டுப்படுத்துவதற்காக விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு தாங்கள் பரிந்துரை செய்திட வேண்டுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம் இதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் கே.எஸ்.பொங்காளி, மாநில பொருளாளர் ராஜாமணி,மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநில துணைச் செயலாளர் சிவக்குமார்,மாவட்டச் செயலாளர் எஸ்.ஏகாம்பரம், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.பழனி,மாநிலத் தலைவர் நடேசகவுண்டர்,

சட்ட ஆலோசகர் அசோகன், ஆர்.ராமகவுண்டர், கே.நாகராஜன், கே.செல்வராஜ்,நாகராஜன், சித்தனூர்,ஆறுமுகம்,சையத்அமீன், வேலாயுதம்,தமிழரசு, நேசம் ராஜி, மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post