தெப்பக்குளம் போல் காட்சியளிக்கும் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் வளாகம்.

ஆண்டிபட்டியில் இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையினால் ஆண்டிபட்டியில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் வடிய இடமில்லாமல் ஆங்காங்கே குளம் போல் காட்சியளிக்கிறது

சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் வளாகப் பகுதியில் நீர் வடிய இடமில்லாமல் தெப்பக்குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது .

மேலும் கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் .

அருகாமையில்  நூலகம் ,பள்ளிக்கூடம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.  பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இப்பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி ,சுகாதாரக் கேடு ஏற்பட்டு |நோய் பரவும் அபாயம் உள்ளது .

தண்ணீர் வடிய பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தும்,மீண்டும் மழை பெய்து கூடுதல் தண்ணீர் நிற்காமல் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி செய்தியாளர்.

ரா.சிவபாலன்





Previous Post Next Post