தமிழ்நாடு நேஷனல் எலக்ட்ரிக் சிட்டி ஒர்க்கர்ஸ் பெடரேசன் மாநில செயற்குழு கூட்டம்.


சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு நேஷனல் எலக்ட்ரிக் சிட்டி ஒர்க்கர்ஸ் பெடரேசன் மாநில செயற்குழு கூட்டம் துணைத்தலைவர் ஆர்.மாதேஸ்வரி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

ஆர்.சுகுமார்,எம்.பிச்சுமணி, எஸ்.கார்வேந்தன் ,ஆர்.ராஜேந்திரன், பி.சக்திவேல் ஆகியோர் முன்னணியில் நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் எஸ். ஆறுமுகம், செயலாளர் என். விஸ்வநாதன், மண்டல செயலாளர்கள் வீ. வெங்கடேசன்,ஆர். சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழக மக்கள் 2021 இல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றது முதல் தொடரும் குரானா இயற்கை சீற்றம் போன்ற பேரழிவுகளில் மக்களை பாதுகாத்திடும் வகையில் உறுதுணையாகவும் புதிய பல அறிவிப்புகள் உடனும் சட்டத்தின் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த செயற்குழு சார்பில் நன்றி தெரிவிக்க பட்டது. 

காலிப் பணியிடங்களில் புதிய ஆட்களை நியமனம் செய்திட தமிழக மின்துறை அமைச்சர் வீ. செந்தில் பாலாஜி அவர்கள் தனி கவனம் செலுத்துமாறு இந்த செயற்குழுவினர் கேட்டுக் கொண்டனர்‌. மின் கழகத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் களப்பணிக்கு 10,000 கேங்க்மேன் பதவியில் பணியாளர்கள் நியமனம் தற்போது போடப்பட்டுள்ள உத்தரவு நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

சம்பள விகிதத்தில் வழங்கி கேங்க்மேன் தொழிலாளர் குடும்பங்கள் பாதுகாத்திட தமிழக முதல்வர் அவர்களை மின்சாரத்துறை அமைச்சர் அவர்களையும் இந்த செயற்குழு சார்பில் கேட்டுக் கொண்டனர். மின் வினியோக பிரிவிற்கு வரும் கோடை காலத்தில் வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் ஒருமுனை மும்முனை மின் அளவுகளை விநியோக பிரிவிற்கு 100 மின் அளவில் வழங்கி வருவாய் இழப்பு பெருமளவில் ஏற்படாமலிருக்க உடனடியாக தரமான மின் அளவி கழகத் தலைவர் அவர்கள் உத்தரவு வழங்குமாறு இந்த செயற்குழு கேட்டுக் கொண்டனர் இது போன்ற 12 விதமான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

Previous Post Next Post