ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு எதிர்கட்சியாக இருந்தால் ஒரு நிலைபாடு திமுக இரட்டை வேடம் போடுவதே வாடிக்கையாகி விட்டது - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தில் 2016-2017 திட்டத்தின் கீழ் 60 கோடி மதிப்பில் நகராட்சி 36 வார்டுகளில் உள்ள 462 பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன 

இதில் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டது.  இதில் கதிரேசன் கோயில் சாலையில் உள்ள ஜீவா நகர் பகுதியில் 2.50 லட்சம் மதிப்பில்  பேவர் பிளாக் சாலை  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது 

இதனை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில் :


திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழகம் வருகை புரிந்த பாரதப் பிரதமர் மோடியை விமர்சித்த திமுக தற்போது அமைதியாக இருப்பதன் காரணம் என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர்

எதிர்க்கட்சியாக இருந்த ஒரு நிலைப்பாடு ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு என்ற இரட்டை வேடத்தை திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது 


எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கவர்னர்  ஆய்வு சென்ற இடங்களில் கவர்னரை கண்டித்து போராட்டங்களை நடத்தியது திமுக  தற்போது கவர்னர் நடத்திவரும் ஆய்வுகளையும் அவர் எடுக்கும் முடிவுகளை எதிர்க்காமல் வாய் முடி மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து திமுக எம்பியும் அமைச்சரும் இருவேறு நிலைபாட்டை கொண்டுள்ளனர் என்பது குறித்த கேள்விக்கு

நேற்றைய தினம் தொலைக்காட்சியில் பார்த்தேன் நிதியமைச்சர் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் வரவேற்போம் என்று கூறியுள்ளார் ஒருவேளை அவர் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரா இல்ல

வேற ஏதும் அறிவுறுத்தலின் பேரில் கூறியுள்ளதால் என்பது தெரியவில்லை நேற்றைய தினம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்பதை நிதி அமைச்சர் கூறியுள்ளார் இதையேதான் நானும் கூறினாலும் அதனை வரவேற்கிறோம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி அதையே தற்போதைய திமுக நிதியமைச்சர் வலியுறுத்தி வருவதாகவும் இதை வரவேற்பதாகவும் தெரிவித்தார் அவர்.

நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் விஜய் பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன் வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ் முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி கழகப் பேச்சாளர் பெருமாள் சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Previous Post Next Post