தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி - கனிமொழி எம்.பி அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்.!*




தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.5 கோடி  மதிப்பீட்டில் துறைமுகம் பகுதியை தூர்வாரி ஆழப்படுத்த பணி இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர்  மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு ஆழப்படுத்தும் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தொடர்ந்து கனிமொழி எம்.பி பேசுகையில்

திராவிட முன்னேற்ற கழகம் பொறுப்பேற்ற நாளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்க கூடிய மீனவ மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்து அதற்கான பணிகளை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது.

பொது மக்களின் கோரிக்கைகளை உடனடியாக சரி செய்து நிறைவேற்றி தரும் ஆட்சியாக திமுகவின் தமிழக அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.


தூத்துக்குடி துறைமுகத்தை ஆளப்படுத்த கூடிய இத்திட்டம் ஏறத்தாழ 9,000 குடும்பங்களுக்கு உதவி செய்ய கூடிய திட்டம்

இந்த பகுதியில் இருக்க கூடிய மீனவர்கள் தங்கள் பிடித்து இருக்கும் மீனை எந்த சிரமமும் இல்லாமல்  வெளியில் கொண்டு வர இத்திட்டத்தை முதல்வரும், அமைச்சரும் நிறைவேற்றி தந்து இருக்கிறார்கள்.

விரைவில் மீனவ மக்களுக்கு அதிக படகு கட்ட கூடிய வசதிகளை செய்து தர 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 

தொடர்ந்து, கால நிலை பருவ நிலை மாற்றதால் அதிகமாக பாதிக்கப்பட கூடிய மீனவர்களுக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும் என கூறினார்.


நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், உதவி இயக்குநர் அன்றோ பிரின்சுலிவிலனா. துறைமுக கோட்ட பொறியாளர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் ரவி,  இளநிலைப் பொறியாளர் தயாநிதி,

பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநில மீனவரணி துணை செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், 


துணை செயலாளர்கள் நிர்மலா, கீதாமுருகேசன். பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், மேகநாதன், ஜெயகுமார். அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்த் கேப்ரியல் ராஜ், மாவட்ட ஊராட்சிமன்ற துணை தலைவர் செல்வகுமார். மீனவரணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், 

துணை செயலாளர் சேசையா, சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஜெபசிங், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம், தொண்டரணி செயலாளர் ரமேஷ், பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன், மாணவரணி துணை செயலாளர் பாலகுருசாமி, 

மாநகர மருத்துவரணி செயலாளர் அருண்குமார், மகளிர் அணி செயலாளர் ஜெபகனி. மீனவரணி செயலாளர் டேனி. மாநகர அணி துணை செயலாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், ராகேஷ், அருண் சுந்தர். மாவட்ட பிரதிநிதி கதிரேசன். 

பகுதி இளைஞரணி செயலாளர் ரவி. வட்ட செயலாளர்கள் டென்சிங், ரவிசந்திரன், ஹார்ட்லி, சதீஷ்குமார், நாராயணன் மற்றும் லிங்கராஜா, மகேஷ்வரசிங், கருணா, மணி, அல்பர்ட்.  தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம். ஒன்றிய செலயாளர்கள் ஜெயகொடி, புதூர் சுப்பிரமணியன்.

இளைஞரணி செயலாளர் ராமஜெயம். விவசாய அணி செயலாளர் ஆஸ்கர். தொண்டரணி செயலாளர் வீரபாகு. துணை செயலாளர் முடிவை ஆறுமுகம். ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஸ்டாலின்.  பரதர் நலச்சங்கத் தலைவர் ரெனால்ட் வில்லவராயர். செயலாளர் இன்னாசி. பொருளாளர் ஜாய் காஸ்ட்ரோ. துறைமுக மீன்பிடி உரிமையாளர் சங்க தலைவர் சேவியர் வாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post