நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி செய்யும் அதிகாரிகளுக்கான தேர்தல் பயிற்சி


நெல்லை மாநகராட்சி தேர்தலில், மண்டல தேர்தல் அலுவலர்களாக  பணி செய்யும் அதிகாரிகளுக்கான தேர்தல் பயிற்சி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 55  வார்டுகளில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 389 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள கொரனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி நெல்லை மாநகராட்சியில் 160 பகுதிகளில் மொத்தம் 490 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 15 முதல் 20 வாக்குச்சாவடி களாக பிரிக்கப்பட்டு மண்டல அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். 

வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று மண்டல அளவில் நியமிக்கப்பட உள்ள தேர்தல் அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் வாக்குச்சாவடிகள் அமைவிடம் வாக்குச்சாவடி பெயர் போன்றவை குறித்த தகவல்களை வாக்காளர்கள் தெரியும் வகையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்த பயிற்சி  நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் மண்டல அளவில் வாக்குப்பதிவு நாளன்று நியமிக்கப்பட இருக்கும் அதிகாரிகள் மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையால்வது வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறுகள் எதுவும் ஏற்பட்டால் சரி செய்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது இன்றைய தினம் பயிற்சி பெறும் அதிகாரிகள் வரும் 31ம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடத்தப்படும் பயிற்சியின்போது பயிற்சி அளிக்க உள்ளார்கள்

Previous Post Next Post