கழுகுமலையில் பரதநாட்டிய பயிற்சி பெற்றவர்க்கு சலங்கை பூஜை விழா.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை நேத்ரா ஶ்ரீ கிட்ஸ் அன்ட் கல்சுரல் அகாடமி சார்பில் பாரத நாட்டியத்தில் பயிற்சி பெற்ற முதல் பேட்ச் குழந்தைகள் பங்குபெற்ற சலங்கை பூஜை விழா ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, அதில் நேத்ரா ஶ்ரீ,  ரேணு பிரியா, நிஷிதா குமாரி, அனு ஶ்ரீ,  ரம்யா ஶ்ரீ,  அக்ஷயா குமாரி, மஹாலக்ஷ்மி, பத்ம ஶ்ரீ  நவநீதா, ராமலக்ஷ்மி, மகிமா மற்றும் அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். 

கலந்து கொண்ட மாணவ கண்மணிகளும், தங்களது திறமையான 3 ஆண்டுகால பயிற்சிக்கு பிறகு தங்கள் குருவிடம் ஆசிபெற்று முதன் முதலில் தங்களது முதல் கொஞ்சும் சலங்கை கட்டி"சலங்கை பூஜை" விழாவை அரங்கேற்றினர் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கதிரேசன் ஆசிரியர் மற்றும் முருகன் திருவள்ளுவர் கழக செயலாளர் அவர்களும் கலந்துகொண்டு பங்குபெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்,

மெடல் மற்றும் பரிசுகள் வழங்கினார்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவெற்று   செல்வமுத்துக்குமார் பேசினார் விழா ஏற்பாடுகளை நேத்ரா ஶ்ரீ கிட்ஸ் & கல்சுரல் அகாடமி நிறுவனத்தார் செல்வமுத்துக்குமார், ரோஹிணி ஆகியோர் செய்திருந்தனர்.

Previous Post Next Post