இலங்கை கடற்படை கப்பல் மோதல்; கடலில் மூழ்கிய 7 மீனவர்கள் மீட்பு.!*


இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் இராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது அதிர்ஷ்டவசமாக படகில் இருந்த 7 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் துறைமுகம்  அழைத்து வந்துள்ளனர்..

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று  மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் இந்நிலையில் கச்சத்தீவு பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த  வஸ்தியான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை மோதியதாக கூறப்படுகிறது 

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழு மீனவர்களை சக மீனவர்கள் தங்களது படகுகளில் ஏற்றி கொண்டு வந்து இன்று காலை  ராமேஸ்வரம் துறைமுக  கரையில்  இறக்கி விட்டுள்ளனர் 

சம்பவம் குறித்து படகு உரிமையாளருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இலங்கை கடற்படை மோதி கடலில் தாழ்ந்த விசைப்படகை மீட்டுத்தருமாறு படகு உரிமையாளர் ராமேஸ்வரம் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார் 

மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடலில் தாழ்ந்த படகினை உடனடியாக தமிழக பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என படகு உரிமையாளர் வஸ்தியான் தெரிவித்துள்ளார்

Previous Post Next Post