தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை மற்றும் அங்கன்வாடி மையம் - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.!


தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தூத்துக்குடி மாநகராட்சி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும்

6வது வார்டு கோயில்பிள்ளை விளை தெருவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறப்பு விழா இன்று நடைபெற்றது

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலை வகித்தனர் 

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்

மேலும் அமைச்சர் கீதாஜீவன் பள்ளி மாணவ மாணவிகளிடம் பேசுகையில் 

தமிழகத்தில் கலைஞர்  முதல்வராக இருந்தபோதுதான் அரசு பள்ளிகள் எல்லாம் தரம் உயர்த்தப்பட்டது. தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு தர தயாராக இருக்கிறது. 

அதனடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இன்று மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டிகள் நிறைந்த எதிர்காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வுகள் மூலம்தான் அரசு வேலை கிடைக்கிறது. எனவே மாணவ, மாணவிகள் படிக்கும்போதே நன்றாக படிக்க வேண்டும். 

தமிழக முதலமைச்சர் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கிற மாணவ, மாண பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவி திட்டத்தின் கீழ், 

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கிற மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12000 கல்வி செலவுக்கு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். மேலும், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிப்பதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும் உள்ளது. 

எனவே அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த நல்ல வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் உங்களை படிக்க வைப்பதால் நீங்கள் அதற்கு நன்றிக்கடனாக நன்றாக படிக்க வேண்டும். மேலும் தமிழக முதலமைச்சர் , திறமைமிக்க, ஆற்றல்மிக்க மாணவ, மாணவிகள் உருவாக வேண்டும் என்று "நானும் முதல்வன்" திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மாநகராட்சி 6வது வார்டு கோவில்பிள்ளைவிளை தெருவில் ரூ.10.67 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரணியன், முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவி, தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், 

கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பேபி ஏஞ்சலின்,  ஜெயசீலி, பள்ளி தலைமையாசிரியர் (பொ) வெள்ளைச்சாமி மற்றும் அலுவலர்கள், மாணவு, மாணவிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post