பட்டையைக் கிளப்பும் சூலூர் பேரூராட்சி


சூலூர் பேரூராட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக 50 தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு 2வது வார்டில் தூய்மைப்பணி  ஜரூராகத் தொடங்கியது,

சாக்கடைகளை சுத்தம் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல்,  அதன் ஓரத்தில் அள்ளிப்போட்ட கழிவுகளை உடனுக்குடனே அப்புறப்படுத்தி, சாக்கடையின் ஓரங்களில் வளர்ந்திருக்கும் தேவையற்ற செடிகளையும் 

வேரோடு புடுங்கி சுத்தப்படுத்துவதால், கொசுத்தொல்லையிலிருந்தும், விஷப்பூச்சிகளிடமிருந்தும் பெருமளவில் பொதுமக்களின் சுகாதாரத்தை முழு அளவில் பேண முடியும் என பேரூராட்சியின் 2வது வார்டு கவுன்சிலர் சூ பெ கருணாநிதி தெரிவித்தார் 

மேலும் சாக்கடையில் குப்பைகள், தேவையற்ற பாட்டில்கள், பாலிதீன் பைகளோடு மீந்த உணவுப்பண்டங்கள் மற்றும் அழுகிப்போன காய்கறிகளை தயவு செய்து சாக்கடையில் வீசாமல் அதன் அருகில் வைத்திருக்கும் குப்பைக் டேங்குகளில் கொட்டுங்கள் என்று பொதுமக்களிடமும் சில கோரிக்கைகளை பேரன்போடு முன் வைத்தார்

சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவிமன்னவன் கூறுகையில் முக்கிய சாலைகளில் மட்டும்,சுத்தம் செய்யும் பணிகளைச் செய்யவில்லை விளம்பரங்களுக்காக, என்னைப் பின்தொடருங்கள் என்று ஒவ்வொரு சந்தாக, விறுவிறுப்பாக அழைத்துச் சென்றவர், இதோ எங்கள் 2வது வார்டு கவுன்சிலர் தலைமையில், எங்கள் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களின் சோர்வற்ற பணியை, 

மனம் மகிழ்ந்து செய்யும் அறப்பணிகளை உலகிற்கு உரக்கச் சொல்லுங்கள் பத்திரிகை நண்பரே, என்று உற்சாகமாக சொன்னபோது நிமிர்ந்தது நாண்காவது தூண், சுகாதாரப் பணியில் பேரூராட்சித் தலைவரோடு உதவித்தலைவர் சோலை ப கணேஷ் உடனிருந்தார்

Previous Post Next Post