காண்கிரீட் வேலைக்கு வந்த நபர் திடீர் மரணம்.! - யார்? எந்த ஊர் என முகவரி தெரியாததால் போலீஸ் குழப்பம்.!

இது குறித்து தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில்..

கடந்த 20.04.2022 ஆம் தேதி காலை சுமார் 08.00 மணிக்கு, தூத்துக்குடி அரசமரத்தடியில் இருந்து சுமார் 30 வயது மதிக்கதக்க அடையளம் தெரியாத ஆண் நபர் ஒருவர், தினக்கூலியாக புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள வள்ளிநாயகம் என்பவர் வீட்டிற்கு காண்கிரீட் போடும் வேலைக்கு வந்தார்.

அவரை தூத்துக்குடி பிரையண்ட் நகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் என்பவர் அழைத்து வந்துள்ளார். 

மேற்படி நபர் பகல் 12.00 மணியளவில் தனக்கு தலைசுற்று வதாக கூறி அருகில் உள்ள மரத்தடியில் படுத்துள்ளார். பின்னர் மணிகண்டன் மற்றும் அவருடன் வேலை பார்த்த கொத்தனார் முருகன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் 30 வயது மதிக்கதக்க அடையளம் தெரியாத அந்த நபர் 20.04.2022-ம் தேதி இரவு 22.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மேற்படி நபரை வேலைக்கு அழைத்து வந்த மணிகண்டன் பல இடங்களில் தேடியும் இறந்தவருடைய முகவரி கிடைக்காததால்  25.02.2022 அன்று  புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. 

இறந்த அன்று இவர் புளு வெள்ளை கருப்பு ஊதா கலரில் கட்டம் போட்ட கைலி அணிந்துள்ளார். இடது கை முடடிக்கு கீழ் முன் பகுதியில் காயத்தழும்பு ,இடது கை புஜத்தில் காயத்தழும்பு அடையாளங்கள் உள்ளன. உயரம் 170 செ.மீ, வயது சுமார் 30. - ஆண்

மேற்படி இறந்த நபரைப் பற்றிய விபரம் தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி காவல் ஆய்வாளர், புதுக்கோட்டை காவல் நிலையம், தொலைபேசி எண்: 0461-2271230.94981-29680, மற்றும் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட முகாம் அலுவலக தொலைப் பேசி எண்: 0461-2376093. ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.Ahamed

Senior Journalist

Previous Post Next Post