கொண்டாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

   திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் கொண்டநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான பெற்றோர்கள் கூட்டம் நடைபெற்றது. பாப்பாக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசுப்ரமணியன் தேர்தல் ஆணையராக செயல்பட்டார். ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி வரவேற்று பேசினார். வார்டு உறுப்பினர் கணேசன், ஊராட்சி எழுத்தர் முத்துராமலிங்கம் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள்  ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.Attachments area
Previous Post Next Post