பள்ளி தேடி கொரோனா தடுப்பூசி - மாணவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பார்த்திபன் முன்னிலையில் செவிலியர்கள் ஜோசப் மேரி ஊசி செலுத்தினார் .மருந்தாளுனர் கனிமொழி,  மருத்துவ உதவியாளர்கள் சிவக்குமார்,தேவதாஸ்   ஆகியோர் மாணவர்களுக்கு  ஊசி செலுத்த ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
Previous Post Next Post