ரசிகர்களை கவரும் ‘பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியீடு !

    


    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.  இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். 

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'பிசாசு 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்த்திருந்த  இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.


Previous Post Next Post